Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: ஆளுங்கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றார் யோஷிஹிடே சுகா; நாடாளுமன்ற வாக்களிப்புக்குப் பிறகு பிரதமர் நியமனம்

ஜப்பானில் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக திரு. யோஷிஹிடே சுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற வாக்களிப்பைத் தொடர்ந்து திரு. சுகா பிரதமராக நியமனம் பெறுவார்.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: ஆளுங்கட்சித் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றார் யோஷிஹிடே சுகா; நாடாளுமன்ற வாக்களிப்புக்குப் பிறகு பிரதமர் நியமனம்

(கோப்புப் படம்: Eugene Hoshiko/Pool via REUTERS)

ஜப்பானில் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவராக திரு. யோஷிஹிடே சுகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற வாக்களிப்பைத் தொடர்ந்து திரு. சுகா பிரதமராக நியமனம் பெறுவார்.

71வயது சுகா இதற்கு முன்னர் ஜப்பானிய அமைச்சரவையின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

பதவி விலகும் பிரதமர் ஷின்ஸோ அபேவுடன் (Shinzo Abe) அணுக்கமாகச் செயல்பட்டவர் அவர்.

தாம் பிரதமரானால், திரு. அபேயைப் பின்பற்றி நாட்டின் நாணயக் கொள்கை, அரசாங்கச் செலவினம் போன்றவற்றை வகுக்கவிருப்பதாக அவர் உறுதிகூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்