Images
  • japan ship
    (படம்: Kyodo/via Reuters)

ஜப்பான்: சொகுசுக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டோரில் சில முதியவர்கள் வெளியேற்றம்

ஜப்பானின் யோக்கோஹாமா (Yokohama) துறைமுகத்தில் அணைந்துள்ள சொகுசுக் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டோரில் சில முதியவர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது.

அந்தக் கப்பல் பயணிகளில் சுமார் 80 விழுக்காட்டினர் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர்.

சொகுசுக் கப்பலில் பலருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால், முதியவர்களின் உடல்நலம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Diamond Princess கப்பலில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான முதல் பிரிவினர் இன்று பிற்பகல் வெளியேற்றப்பட்டனர்.

அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் இடங்களுக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுவர்.

80 வயதுக்கும் அதிகமானோர், கப்பலில் சன்னல்கள் இல்லாத அறையில் இருந்தோர் போன்றோர் முதலில் வெளியேற்றப்படுவர்.

சொகுசுக் கப்பல் பயணிகளில் சுமார் 220 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இன்னும் சுமார் 3,500 பேர் அதில் சிக்கியுள்ளனர்.

Top