Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: தண்ணீர் விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவரப் போராட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்குப் பகுதியில் தண்ணீர் விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர நகர மன்ற ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: தண்ணீர் விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவரப் போராட்டம்

படம்: REUTERS/Issei Kato

ஜப்பான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்குப் பகுதியில் தண்ணீர் விநியோகத்தை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர நகர மன்ற ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

வரலாறு காணாத கனத்த மழை பெய்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 200க்கும் மேற்பட்டோர் மாண்டனர். 36 ஆண்டுகளில் ஆக மோசமான வானிலைப் பேரிடராக அது கருதப்படுகிறது.

கடந்த வாரம் உயரும் வெள்ள நீருடன் போராடி வந்த மக்கள், தற்போது, சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொள்கின்றனர்.

குப்பைகளின் துர்நாற்றமும் சகதி நிறைந்த சாலைகளும் அவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளன.

200,000 குடியிருப்பாளர்கள் ஒரு வாரம் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்