Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: சில மாநிலங்களில் நடப்பிலுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன

ஜப்பான், கிருமிப்பரவலுக்கு எதிராக 3 மாநிலங்களில் நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளை, நாளை மறுநாள் முதல் தளர்த்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

ஜப்பான், கிருமிப்பரவலுக்கு எதிராக 3 மாநிலங்களில் நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளை, நாளை மறுநாள் முதல் தளர்த்தவிருக்கிறது.

குன்மா, இஷி-காவா, குமா-மோட்டோ ஆகிய மாநிலங்களில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
அதனைத் தொடர்ந்து, உணவகங்கள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்படலாம். இன்னும் கூடுதலானோர் சமூக, பொழுதுபோக்குக் காரணங்களுக்காக ஒன்று கூட அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், தோக்கியோ, ஒசாக்கா உள்ளிட்ட பத்து மாநிலங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதால், அங்கு தொடர்ந்து அவசரநிலை நடப்பில் இருக்கும்.

அவசரநிலை முடிவுறும்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள்பற்றிப் பரிசீலித்து, ஜப்பானிய அரசாங்கம் முடிவெடுக்கும். அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்தில் சந்தித்து அதுபற்றி முடிவெடுப்பர்.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில், அடுத்த மாதம் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்