Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு புற்றுநோயைக் கண்டறியும் சோதனை

ஜப்பானின் Hitachi நிறுவனம், சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு புற்றுநோயைக் கண்டறியும் சோதனையை நடத்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு புற்றுநோயைக் கண்டறியும் சோதனை

படம்: AFP/SAUL LOEB

ஜப்பானின் Hitachi நிறுவனம், சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு புற்றுநோயைக் கண்டறியும் சோதனையை நடத்தவிருக்கிறது.

அத்தகைய முதல் சோதனை அது. நிறுவனம் ஈராண்டுக்கு முன்பு, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றைச் சிறுநீர் மாதிரிகளைக் கொண்டு கண்டறிவதற்கான அடிப்படைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

புதிய சோதனை முறை நடப்புக்கு வந்தால் நோயாளிகள் புற்றுநோயைக் கண்டறிவது மேலும் எளிதாகலாம் என்று அது கூறியது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோயைக் கண்டறியவும் அது உதவும் என்று நம்பப்படுகிறது. சுமார் 250 மாதிரிகளுடன் இம்மாதம் தொடங்கும் சோதனைகள் வரும் செப்டம்பர் வரை தொடரும்.

ஜப்பானின் Nagoya பல்கலைக்கழகமும் அந்த முயற்சியில் கைகோத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்