Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: ஹகிபிஸ் அசாதாரண சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஹகிபிஸ் (Hagibis), அசாதாரண சூறாவளியாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: ஹகிபிஸ் அசாதாரண சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

(படம்: AFP)

ஜப்பானைப் புரட்டிப் போட்ட ஹகிபிஸ் (Hagibis), அசாதாரண சூறாவளியாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

நிவாரணப் பணிகளுக்கும், மறு நிர்மாணத்திற்கும் அதிகத் தொகை ஒதுக்க அத்தகைய அறிவிப்பு உதவும்.

சூறாவளியால் 78 பேர் மாண்ட நிலையில் மேலும் 9 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

இவ்வேளையில், பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் இன்றும், நாளையும் அதிக மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை பெய்தால், ஆறுகளில் வெள்ளம் அதிகரிக்கக்கூடும், நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சீரமைப்புப் பணிகள் தொடரும் வேளையில், சுமார் 4,000 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

Shinkansen எனப்படும் அதிவேக ரயில்களுக்கான பணிமனையில் வெள்ள அபாயம் குறித்துச் சோதனை நடத்தப்படும் என்று ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் சிக்குமா (Chikuma) ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அதிவேக ரயில்கள் சேதமுற்றதையடுத்து அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்