Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுத்திரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, கடலில் கலக்கத் திட்டமிடும் ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கம், சுத்திரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, கடலில் கலக்கத் திட்டமிடுகிறது. 

வாசிப்புநேரம் -
சுத்திரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, கடலில் கலக்கத் திட்டமிடும் ஜப்பான்

(படம்: AFP)

ஜப்பானிய அரசாங்கம், சுத்திரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, கடலில் கலக்கத் திட்டமிடுகிறது.
அது குறித்த அதிகாரபூர்வ முடிவு விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 இல் கடுமையான நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டதால், ஃபுக்குஷிமா தாய்ச்சி (Fukushima Daiichi) அணு ஆலை செயல்-இழந்தது.

அதனைத் தொடர்ந்து, Tokyo Electric நிறுவனம், ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான, மாசுபட்ட நீரைச் சேகரித்துள்ளது.

ஆனால், அதற்கு இடப் பற்றாக்குறை நிலவுவதால், நாள்தோறும் சுமார் 170 டன் நீரைக் கடலில் கலக்க ஜப்பானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கு மீனவர்களும் குடியிருப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாசுபட்ட நீரால், கடல் உணவு பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஜப்பானிலிருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய தென் கொரியா தடை விதித்துள்ளது.

சுற்றுப்புறத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறித்தும் அது அக்கறை தெரிவித்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்