Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வசதி குறைந்த நாடுகளுக்கு வழங்கப்படும் தடுப்புமருந்துகளை இரட்டிப்பாக்கவுள்ளது ஜப்பான்

ஜப்பான், வசதி குறைந்த நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருக்கும் தடுப்புமருந்துகளின் அளவை இருமடங்காக உயர்த்தவுள்ளது.

வாசிப்புநேரம் -
வசதி குறைந்த நாடுகளுக்கு வழங்கப்படும் தடுப்புமருந்துகளை இரட்டிப்பாக்கவுள்ளது ஜப்பான்

படம்: REUTERS

ஜப்பான், வசதி குறைந்த நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவிருக்கும் தடுப்புமருந்துகளின் அளவை இருமடங்காக உயர்த்தவுள்ளது.

முன்னதாக ஜப்பான் COVAX திட்டத்துக்கு 30 மில்லியன் அளவு தடுப்புமருந்துகளை வழங்கவுள்ளதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1 பில்லியன் டாலரையும் நன்கொடையாக வழங்க அது உறுதிகூறியது.

தற்போதைய நிலையில் COVAX திட்டத்துக்கு அது வழங்கும் தடுப்புமருந்துகள் 60 மில்லியன் அளவுக்கு உயர்த்தப்படும் என அந்நாட்டுப் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) மின்னிலக்க உச்சநிலைச் சந்திப்பொன்றில் அறிவித்தார்.

மற்ற நாடுகளுக்கு ஜப்பான் இதுவரை 23 மில்லியன் அளவு தடுப்புமருந்துகளை வழங்கியுள்ளது. உலகில், ஆக அதிகமான அளவில் தடுப்புமருந்தை நன்கொடையாக வழங்கியுள்ள நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளதாகத் திரு சுகா குறிப்பிட்டார்.

ஜப்பானின் தடுப்புமருந்து நன்கொடைத் திட்டத்திற்கு உள்நாட்டில் தயாரான AstraZeneca வழங்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்