Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானின் ஒசாக்காவில் நெருக்கடிநிலைக் கட்டுப்பாடுகள்

ஜப்பானின் ஒசாக்கா வட்டாரத்தில்  கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க நெருக்கடிநிலைக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

ஜப்பானின் ஒசாக்கா வட்டாரத்தில் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க நெருக்கடிநிலைக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக நேரம் குறைக்கப்படுவதோடு, மக்கள் வீட்டிலிருந்தபடி வேலைபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பாடல்கூடங்களில் பாடுதல் (Karaoke) போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கவேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் வலியுறுத்தியது.

ஒசாக்காவின் முக்கிய நகரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படவேண்டும் என்று அதன் ஆளுநர் ஹிரோஃபுமி யோஷிமுரா குறிப்பிட்டார்.

அங்கு 4ஆம் முறையாகக் கிருமிப்பரவல் சூழல் நிலவக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஒசாக்கா, ஹியோகோ, மியாகி ஆகிய பகுதிகளில் நெருக்கடிநிலைக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் பொருளியல் அமைச்சர் யாசுதோஷி நஷிமுரா தெரிவித்தார்.

கடந்த சில நாள்களில் ஒசாக்காவில் அதிகளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று ஒரே நாளில் அங்கு சுமார் 600 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

- Reuters/mi 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்