Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புழுக்களைக் கொண்டு புற்றுநோயை அடையாளம் காணும் சோதனைமுறை

ஜப்பானில் புழுக்களைக் கொண்டு புற்றுநோயை அடையாளம் காணும் சோதனைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஜப்பானில் புழுக்களைக் கொண்டு புற்றுநோயை அடையாளம் காணும் சோதனைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் வழக்கமான பரிசோதனைகளை எளிமையாக்கமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Hirotsu Bio Science எனும் நிறுவனத்தின் சோதனைமுறைப்படி சிறுநீர் மாதிரிகள்வழி கணையத்தில் புற்றுநோயை அடையாளம் காணமுடியும்.

நோயை நுகர்ந்து கண்டுபிடிக்கும் அளவில் 'C. elegans' எனும் ஒரு வகைப் புழு மரபணு முறையில் மாற்றப்பட்டுள்ளது.

மாதிரிகளில் எதாவது வித்தியாசமாகக் கண்டுபிடித்தால் நோயாளிகள் மேல் பரிசோதனைகளுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.

கணையப் புற்றுநோயை (pancreatic cancer) முன்கூட்டியே அடையாளம் காண்பது, பொதுவாக மிகவும் சிரமம்.

எனவே சோதனை முறையின் கண்டுபிடிப்பு பெரும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்