Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பானில் மீண்டும் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான மாது

ஜப்பானில், COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த பெண், மீண்டும் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜப்பானில் மீண்டும் COVID-19 கிருமித்தொற்றுக்கு ஆளான மாது

(படம்: AFP/Charly Triballeau)

ஜப்பானில், COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த பெண், மீண்டும் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருமித்தொற்று அதிகரித்துவரும் வேளையில், ஏற்கனவே குணமடைந்த ஒருவர், மீண்டும் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பது ஜப்பானில் இதுவே முதன்முறை என்று Nikkei நாளேடு குறிப்பிட்டது.

ஜப்பானின் ஒசாக்கா (Osaka) நகரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், கடந்த மாதத்தின் பிற்பாதியில் கிருமித்தொற்றுக்கு ஆளானார்.

அதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர், இம்மாதம் முதல் தேதி குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

நேற்று, தொண்டை கரகரப்பாலும் நெஞ்சு வலியாலும் அவதியுற்ற அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது கிருமித்தொற்றுக்கு மீண்டும் ஆளாகியிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்