Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா : சமய, குடிமைக் கழங்களுக்குள் ஊடுருவும் ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு

இந்தோனேசியாவில், ஜமாஆ இஸ்லாமியா (Jemaah Islamiyah) பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் சமய, குடிமைக் கழகங்களில் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியா : சமய, குடிமைக் கழங்களுக்குள் ஊடுருவும் ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு

(படம்: AFP/CHAIDEER MAHYUDDIN)

இந்தோனேசியாவில், ஜமாஆ இஸ்லாமியா (Jemaah Islamiyah) பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் சமய, குடிமைக் கழகங்களில் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அது குறித்து அந்நாட்டின் பயங்கரவாத முறியடிப்பு அமைப்பின் மூத்த அதிகாரி தகவல் வெளியிட்டார்.

ஜமாஆ இஸ்லாமியாவின் கொள்கைகளைப் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் திரு. அஹ்மது நூர்வாஹிட் (Ahmad Nurwakhid) CNA-யிடம் கூறினார்.

அல் கயிடா (al Qaeda) இயக்கத்துடன் தொடர்புடைய, ஜமாஆ இஸ்லாமியா அமைப்புக்கு நிதி திரட்டிய சந்தேகத்தின்பேரில் அண்மையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் இஸ்லாமிய உயர் மன்றத்தின் உறுப்பினர்.

எஞ்சிய இருவரில், ஒருவர் சமய போதகர், மற்றொருவர், விரிவுரையாளர்.

மக்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஜமாஆ இஸ்லாமியா ஊடுருவியுள்ளதை அது வெளிப்படுத்துகிறது. ஜமாஆ இஸ்லாமியா மற்ற சமய அமைப்புகளிலும், விளையாட்டு அமைப்புகளிலும் கூட இடம் பெற்றிருக்கலாம்,

என்று திரு. நூர்வாஹிட் கூறினார்.

2010-ஆம் ஆண்டிலிருந்து, ஜமாஆ இஸ்லாமியா அமைப்புடன் தொடர்புடைய 18 அரசாங்க ஊழியர்கள், 8 காவல்துறை அதிகாரிகள், 5 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

- CNA/ni (ih) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்