Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படலாம்

ஜெட் ஏர்வேஸிடம் தற்போது 41 விமானங்களே உள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

ஜெட் ஏர்வேஸிடம் தற்போது 41 விமானங்களே உள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இது ஏற்கனவே அதனிடம் இருந்த விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி தான்.

வரும் வாரங்களில் விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படலாம் என்று அமைப்பு கூறியது.

ஜெட் ஏர்வேஸ் 1 பில்லியன் டாலர் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ஆகப்பெரிய பங்குதாரரரான எட்டிஹாட் ஏர்வேஸுடன் மீட்பு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் அது திணறிவருகிறது.

மேலும் அதன் விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகையை ஜெட் ஏர்வேஸ் நிலுவையில் வைத்துள்ளது.

இதன் காரணமாக மனவுளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறும் எந்த ஊழியரையும் பணியமர்த்தக் கூடாது என்று ஜெட் ஏர்வேஸிடம் இந்திய சிவில் விமானப் போக்குவரவுக் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்