Images
  • Jet Airways Suspend
    (படம்: Reuters)

Jet Airways நிதி உதவி பெறுமா ?

Jet Airways நிறுவனத்துக்குக் கடன் கொடுத்தவர்கள்
நிதியுதவி வழங்குவது பற்றி விவாதிக்கவுள்ளனர்.

தற்போது Jet Airways விமான நிறுவனத்திடம் 7 விமானங்கள் மட்டுமே மீதம் உள்ளன. அந்த நிறுவனத்துக்குக் கடன் கொடுத்தவர்கள் மற்ற விமானங்களைப் பறிமுதல் செய்து விட்டனர்.

Jet Airways இன் 24 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருக்கும் Etihad Airways 75 விழுக்காட்டுப் பங்குகள் வரை வாங்க முன்வந்துள்ளது.

Jet Airways நிறுவனத்துக்குக் கடன் கொடுத்த அமைப்புகளில் முக்கியமானது  ஸ்டேட் பேங்க் அஃப் இந்தியா.
கடந்த மாதம் அது Jet Aiwrays-யைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

கடன் பிரச்சினையைத் தீர்க்க உதவும் வகையில் 218 மில்லியன் கூடுதல் கடன் வழங்க அந்த வங்கி உறுதியளித்தது. என்றாலும், அதில் பெரும்பகுதி நிதி இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.  

Top