Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விமானப் பயணச் சோர்வுக்குத் தீர்வுகாண முயலும் All Nippon Airways

ஜப்பானின் All Nippon Airways நிறுவனம்,நீண்ட நேர விமானப் பயணத்தை மேற்கொள்வோர் எதிர்நோக்கும் "Jet lag" எனப்படும் சோர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்கிறது.

வாசிப்புநேரம் -
விமானப் பயணச் சோர்வுக்குத் தீர்வுகாண முயலும் All Nippon Airways

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜப்பானின் All Nippon Airways நிறுவனம்,நீண்ட நேர விமானப் பயணத்தை மேற்கொள்வோர் எதிர்நோக்கும் "Jet lag" எனப்படும் சோர்வுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்கிறது.

அத்தகைய சோர்வைக் கையாளப் புதிய செயலி ஒன்றைச் சோதித்துவருவதாக அது கூறியது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தச் செயலி அறிமுகம்காணும்.

செயலியின் மூலம் பயணிகள் விமானப் பயணத் தகவல்கள், சென்றுசேரும் இடம் குறித்த தகவல்களைப் பெறுவர்.

அத்துடன், சோர்வைச் சமாளிக்க, எப்போது உணவு உண்ணலாம், எப்போது உடற்பயிற்சி செய்யலாம் போன்ற உதவிக் குறிப்புகளையும் அவர்கள் பெறுவர்.

செயலியை விமான நிலையத்தில் பயணிகளுக்கான காத்திருப்பு இடங்கள் உள்ளிட்ட சில சேவைகளுடன் இணைக்கவும் All Nippon Airways திட்டமிடுகிறது.

தோக்கியோவின் NeuroSpace எனும் நிறுவனம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் செயலிகளை உருவாக்கிவருகிறது. அதனுடன் இணைந்து விமான நிறுவனம் அதன் புதிய செயலியை வடிவமைத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்