Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது சட்டத்தை மதிக்கவில்லை: ஜோ லோ

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது சட்டத்தை மதிக்கவில்லை என நாடுகடந்து வாழும் வர்த்தகர் ஜோ லோ குறிப்பிட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது சட்டத்தை மதிக்கவில்லை: ஜோ லோ

(படம்: Facebook/Jho Low)

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது சட்டத்தை மதிக்கவில்லை என நாடுகடந்து வாழும் வர்த்தகர் ஜோ லோ குறிப்பிட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள்மூலம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் உல்லாசப் படகான 'இக்குவானிமிட்டி' (Equanimity) தனக்குச் சொந்தமாது என்பதை அமெரிக்கா இதுவரை நிரூபிக்கவில்லை என்றார் அவர்.

உணர்ச்சிமிக்க பேச்சுவார்த்தை நடந்தபிறகே இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி திரு. டோமி தாமஸ் சில நாட்களுக்குமுன் தெரிவித்திருந்தார்.
மலேசிய நீதிமன்ற நடைமுறையின்கீழ் 'இக்குவானிமிட்டி' உல்லாசப் படகின் உரிமையாளரை அடையாளங்காண சுமார் 9 மாதங்கள் ஆகும் என அவர் கூறினார்.

'இக்குவானிமிட்டி' உல்லாசப் படகை டாக்டர் மகாதீர் கைப்பற்றியதைத் தொடர்ந்து அதை நியாயமான விலையில் விற்பது சாத்தியமில்லை என திரு. ஜோ லோ தெரிவித்தார்.

படகை வாங்கும் எந்தப் புதிய உரிமையாளருக்கும் அது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றார் அவர்.

'இக்குவானிமிட்டி' உல்லாசப் படகை நேற்று டாக்டர் மகாதீர் 45 நிமிட நேரம் சுற்றிப்பார்த்தார்.

அதற்கும் வர்த்தகர் திரு. ஜோ லோவுக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது.

அவரது தனியார் விமானத்தைத் திரும்பக் கொண்டுவர மலேசிய அரசாங்கம் இப்போது திட்டமிடுவதாகவும் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்