Images
  • jho lo
    (படம்: AFP/Dimitrios Kambouris)

1MDB தொடர்பில் தேடப்பட்டுவரும் வர்த்தகர் ஜோ லோ இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மலேசியக் காவல்துறை, 1MDB ஊழலில் தொடர்புடையதாகக் கருதப்படும் வர்த்தகர் ஜோ லோ இருக்குமிடத்தைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலைத் தற்போது வெளியிட இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வர்த்தகர் லோ, பல பில்லியன் டாலர் நிதி ஊழல் வழக்கில் மலேசிய அதிகாரிகளால் தேடப்படுபவர்.

விசாரணைக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது நோக்கம்.

லோ தற்போது தங்கியிருக்கும் நாட்டின் அதிகாரிகளுடனும் அந்த விவகாரம் குறித்துக் கலந்துபேசவேண்டியிருப்பதாகக் காவல்துறை கூறியது.

அந்த விவகாரம் அந்த நாட்டின் அரசுரிமையுடன் தொடர்புடையது என்பதை அது சுட்டியது.

Top