Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜோ லோவின் சொகுசுக் கப்பலுக்கும் தமக்கும் தொடர்பில்லை : திரு.நஜிப்

நிதி மோசடியால் லோ மலேசியாவை விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -
ஜோ லோவின் சொகுசுக் கப்பலுக்கும் தமக்கும் தொடர்பில்லை : திரு.நஜிப்

(படம்:REUTERS/Lai Seng Sin)

மலேசியாவின் OneMDB அரசாங்க முதலீட்டு நிதியில் இருந்து கையாடிய பணத்தைக் கொண்டு Equanimity சொசுகுக் கப்பலை ஜோ லோ (Jho Low) வாங்கியது நிரூபிக்கப்பட்டால், அதற்கு அவரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார்.

அந்த நிதி மோசடியால் லோ மலேசியாவை விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அது பற்றி இன்று திரு நஜிப் ஊடகங்களிடம் பேசினார்.

அந்தச் சொகுசுக் கப்பலுக்கும், தமக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் கூறி வருகிறார்.

அக்கப்பல் தற்போது கிள்ளான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அது லோவுக்குச் சொந்தமானது என, அமெரிக்க நீதித்துறை கடந்த ஆண்டு பதிவு செய்த வழக்கில் குறிப்பிட்டது.

அந்தச் சொகுசுக் கப்பல் மலேசியாவுக்கே சொந்தம் எனப் பிரதமர் மகாதீர் முகமது கூறுகிறார்.

பராமரிப்பதற்கு அதிகச் செலவாவதால், அரசாங்கம் கூடிய விரைவில் அதனை விற்க வேண்டும் என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்