Images
  • jho
    (படம்: Bernama)

தலைமறைவான ஜோ லோவைத் தேட சீனாவின் உதவியை நாடும் மலேசியா

கெந்திங் ஹைலேண்ட்ஸ்: தலைமறைவான மலேசியத் தொழிலதிபர் ஜோ லோவைத் தேடும் பணிகளில் சீனாவின் உதவியை நாடியுள்ளது மலேசியக் காவல்துறை.

ஜோ லோவைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மலேசியக் காவல்துறைத் தலைமை அதிகாரி முகமது ஃபூஸி ஹருண் சந்திப்புக்குப்பின் கூறினார்.

மலேசியக் காவல்துறை தொடர்ந்து அனைத்துலகக் காவல்துறையுடன் இணைந்து செயலாற்றுவதாகவும் அவர் இன்று (ஜனவரி 13) கூறினார்.

கடினமாக இருந்தாலும் ஜோ லோவைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடரும் என்று வியாழக்கிழமை (ஜனவரி 10)மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருந்தார் .

மலேசியாவின் 1MDB மோசடி விசாரணையில் முக்கியச் சந்தேக நபராக ஜோ லோவை அமெரிக்காவும் மலேசியாவும் அடையாளம் கண்டுள்ளன. ஹாங்காங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் மக்காவ் பக்கத்தில் இருக்கும் தீவில் தலைமறைவாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
 

Top