Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர்: மின்னியல் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு

ஜொகூர்: மூவார் நகரில் உள்ள மின்னியல் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜொகூர்: மின்னியல் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு

படம்:

ஜொகூர்: மூவார் நகரில் உள்ள மின்னியல் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நேற்று (ஜூலை 13) காலை நடந்தது.

காலை சுமார் 10.50 மணிக்குத் தங்காக் தீயணைப்பு நிலையத்திற்கு அதன் தொடர்பில் அழைப்பு வந்தது.

8 தீயணைப்பாளர்கள் தொழிற்சாலைக்கு விரைந்தனர்.

அங்கு 3 பீப்பாய்களிலிருந்து sodium fluoride எனும் ரசாயனம் கசிந்திருந்தது.

1 லிட்டருக்கும் குறைவான ரசாயனமே கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அது மேலும் கசியாமல் இருக்க தீயணைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

ரசாயனம் மற்ற ரசாயனங்களோடு கலந்திருந்ததால் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பாளர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்