Images
  • johor
    (படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரின் முக்கிய உணவு ஏற்றுமதியாளர் என்னும் நிலையை எட்ட ஜொகூர் ஆர்வம்

சிங்கப்பூரின் முக்கிய உணவு ஏற்றுமதியாளர் என்னும் நிலையை எட்டிப்பிடிக்க, ஜொகூர் ஆர்வமாய் உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் ஹஸ்னி முகமது (Hasni Mohammad) தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமித்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜொகூரின் பொருளியலை மீட்டெடுக்க, வேளாண் துறை வளர்ச்சியில் அதிக ஈடுபாடு காட்டப்போவதாக அவர் கூறினார்.

CNAவுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், அவர் அதுபற்றிப் பேசினார்.

"சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், ஜொகூரின் உணவுத் தொழில்துறை பொருளியலுக்குப் பெரிய பங்களிக்கக்கூடும்"

என்பதை அவர் சுட்டினார்.

ஜொகூரின் வேளாண் துறையை விரிவுபடுத்துவதன் மூலம், அதன் சொந்த உணவுப் பாதுகாப்பும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சுமார் 37 விழுக்காட்டுக் கோழிகளையும், 15 விழுக்காட்டு மீன்களையும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதாகக் கூறப்படுகிறது.

முட்டைகள், காய்கறி, பால்-ஆகியவற்றையும் சிங்கப்பூர் ஜொகூரிலிருந்து கணிசமாக இறக்குமதி செய்துவருகிறது. 

Top