Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர்: COVID-19 கிருமித்தொற்றால் பள்ளி மாணவர் கைது என்று இணையத்தில் பரவும் பொய்த் தகவல்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டதாக இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று மாநிலச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜொகூர்: COVID-19 கிருமித்தொற்றால் பள்ளி மாணவர் கைது என்று இணையத்தில் பரவும் பொய்த் தகவல்

(படம்: REUTERS/Thomas Peter)

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டதாக இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று மாநிலச் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசாங்க மருத்துவமனை காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மாணவர் சுகாதாரப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார்.

மாணவருக்கு COVID-19 கிருமி தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது; மேற்கொண்டு பரிசோதனைக்காக மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் குடும்பத்தினர் அந்த மாணவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்று சுகாதாரத் துறை இயக்குநர் அமன் ரபூ கூறினார்.

எனவே காவல்துறை தலையிட்டு மாணவரைப் பரிசோதனைக்கு அனுப்பியது.

தொற்றுநோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளி மருத்துவமனையின் அறிவுரையை மீறுவது குற்றம் என்பதைப் பொதுமக்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

தவறான செய்தியைப் பரப்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்