Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரின் கோத்தா திங்கிக்கு அருகே திடீர் வெள்ளம் - 600 பேர் துயர்துடைப்பு நிலையங்களில்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கிக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 600 பேர் மீட்கப்பட்டுத் துயர்துடைப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜொகூரின் கோத்தா திங்கிக்கு அருகே திடீர் வெள்ளம் - 600 பேர் துயர்துடைப்பு நிலையங்களில்

(படம்: Bernama)

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கிக்கு அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 600 பேர் மீட்கப்பட்டுத் துயர்துடைப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தாமான் அமான், தாமான் மாவாய் ஆகிய இடங்களில் வசிக்கும் சுமார் 170 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

பெமாண்டி ஆறு பெருக்கெடுத்து கரையை உடைத்துக்கொண்ட போது, அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாகக் கோத்தா திங்கி மாவட்ட நிர்வாகச் செயலகம் தெரிவித்தது.

அதன் காரணமாக அங்கு வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இரு கல்வி நிலையங்களில் அவர்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள போதும் அவர்கள் வீடு திரும்ப இன்னும் அனுமதிக்கப்படவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்