Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா - சிங்கப்பூர் சந்திப்பு நல்ல செய்தியைக் கொண்டு வரும்: ஜொகூர் முதல்வர் நம்பிக்கை

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள சந்திப்பு நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்று நம்புவதாக ஜொகூர் முதல்வர் ஹஸ்னி முகமது (Hasni Mohammad) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள சந்திப்பு நல்ல செய்தியைக் கொண்டு வரும் என்று நம்புவதாக ஜொகூர் முதல்வர் ஹஸ்னி முகமது (Hasni Mohammad) தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்துச் சந்திப்பின்போது பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைகளை மீண்டும் திறப்பது ஜொகூர் மாநில அரசாங்கத்தின் முக்கிய இலக்கு என்று கூறிய திரு. ஹஸ்னி, ஜொகூர் எல்லையைக் கடப்போர் COVID-19 தடுப்பூசி போட்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

அது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்போவதாக அவர் சொன்னார்.

எனினும், ஜொகூரிலிருந்து சிங்கப்பூர் வருவோர், சிங்கப்பூர் முழுவதும் பயணம் செய்ய முடியாது என்று அவர் சுட்டினார்.

குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே அவர்கள் செல்வதுபோன்ற நடைமுறை செயல்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்