Images
  • johor hospital canteen (1)
    (படம்: Bernama)

ஜொகூர் மருத்துவமனை உணவகத்தில் எலி

ஜொகூர் பாருவின் சுல்தான் இஸ்மாயில் (Sultan Ismail) மருத்துவமனையின் உணவகம் சுகாதாரத் தரநிலை எட்டப்படாத காரணத்தால் 2 வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த உணவகத்தில் எலி ஒன்று இருந்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துக்கொள்ளப்பட்ட பின்னர், அங்கே சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த உணவகம் சுகாதாரத் தரநிலைகளை எட்டவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது.

தீவிரத் துப்புறவு பணிகள் மேற்கொள்வதற்கு வகைசெய்ய அந்த உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டிருக்கிறது.

சுகாதாரத் தரநிலைகளை எட்டிய பிறகே உணவகம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என ஜொகூர் சுகாதாரத் துறை தெரிவித்தது.





Top