Images
  • kachal
    படம்:  :Bernama

ஜொகூர் மாநிலத்தில் 89 மாணவர்கள் சளிக்காய்ச்சலால் பாதிப்பு

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் 89 மாணவர்கள் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூர் பாருவில் மட்டும் ஆக அதிகமாக 56 சம்பவங்களும், கூலாய்-யில் அடுத்தபடியாக 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்று ஜொகூர் கல்வித்துறை இயக்குனர் அஸ்மான் அட்னான் (Azman Adnan) கூறியிருக்கிறார்.

பாலர் கல்வி, தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மற்றும் தனியார் சுகாதார மையங்கள் தகவல் அளித்தன.

இதுவரை பள்ளிகளோ வகுப்புகளோ மூடப்படவில்லை என்று அவர் கூறினார்.

பள்ளிகள் எப்போதும்போலவே செயல்படுவதாகவும், வகுப்பறைகள் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படுவதாகவும் திரு அஸ்மான் தெரிவித்தார்.

அதிகமான சளிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவானால், சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலகம் பள்ளிகள் மூடப்பட வேண்டுமா என்பதுகுறித்து முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.
 

Top