Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூரில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

ஜொகூரில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

வாசிப்புநேரம் -
ஜொகூரில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது

(Photo: Justin Ong)

ஜொகூரில் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், புதிய கூட்டணி மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருப்பதாகவும் ஜொகூர் அரண்மனை அறிவித்திருக்கிறது.

ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் அதன் விவரங்கள் இடம்பெற்றன.

புதிய கூட்டணியில் PPBM எனப்படும் பெர்சாத்து கட்சி, தேசிய முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரின் தனிப்பட்ட செயலாளர் அதனை உறுதி செய்தார்.

நேற்று முன்தினம், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து விலகுவதாக பெர்சாத்து கட்சி அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, ஜொகூர் முதலமைச்சர் சஹருதீன் ஜமால், தேசிய முன்னணி ஜொகூர் தலைவர் ஹாஸ்னி முகமது இருவரும் ஜொகூர் சுல்தானைச் சந்தித்தனர். புதிய கூட்டணிக்கு மாநில ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மை இருப்பது குறித்து அவர்கள் தெரிவித்தனர்.

சுல்தான் இப்ராஹிம் 56 மாநில உறுப்பினர்களையும் அழைத்து அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்