Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமிப்பரவல் : மலேசியாவின் ஜொகூர் பாரு மாநிலம் சிவப்புப் பகுதியாக அறிவிப்பு

மலேசியாவின் ஜொகூர் பாருவிலுள்ள ஒரு வட்டாரம் கிருமிப்பரவல் காரணமாகச் சிவப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் ஜொகூர் பாருவிலுள்ள ஒரு வட்டாரம் கிருமிப்பரவல் காரணமாகச் சிவப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஜொகூர் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் வித்யானந்தன் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலும் வேலை இடத்திலும் பெரும்பாலோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலேசியச் சுகாதார அமைச்சு விதிகளின் படி, ஒரு வட்டாரத்தில் 41 அல்லது அதற்கு அதிகமானோர் 2 வாரத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளானால், அது சிவப்புப் பகுதியாகக் கருதப்படுகிறது.

நேற்று, அங்கு புதிதாகக் 10 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. அவர்களில் 9 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்று இடங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போது ஜொகூரில் ரிண்டிங், கெம்பாஸ், பாயு ஆகிய 3 கிருமித்தொற்று இடங்கள் உள்ளன. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று திரு. வித்யானந்தன் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்