Images
  • Johor Sultan Pasir Gudang (1)
    (படம்: Facebook / Sultan Ibrahim Sultan Iskandar)

பாசிர் கூடாங் நச்சுவாயுக் கசிவு: துயர்துடைப்பு நடவடிக்கைகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் வழங்கும் ஜொகூர் சுல்தான்

பாசிர் கூடாங் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் (Ibrahim Iskandar) 1 மில்லியன் ரிங்கிட் வழங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

தனது பிள்ளையைக் காப்பாற்ற மன்றாடிய ஒரு தந்தையின் அழுகையால் சுல்தான் மிகவும் பாதிப்படைந்ததாக அவரின் துணைவியார் குறிப்பிட்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித்தர தீயணைப்பு, மீட்புத் துறை, காவல்துறை, மற்ற அரசாங்க அமைப்புகள் ஆகியவை அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம் என ஜோகூர் அரசப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது.

நச்சுவாயுக் கசிவு காரணமாகப் பாசிர் கூடாங் வட்டாரத்தில் இருக்கும் 111 பள்ளிகளையும் மூட, மலேசியாவின் கல்வியமைச்சு நேற்று (மார்ச் 13) உத்தரவிட்டது.

இதுவரை சுமார் 506 பேர் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




 

Top