Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பக்கட்டான் ஹரப்பான் அல்லது புதிய கூட்டணி': நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கோரும் ஜொகூர் மன்னர்

ஜொகூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கட்டான் ஹரப்பானையோ, புதிய கூட்டணியையோ தெரிவு செய்ய விரும்புகிறார்களா என்பதை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் ஜொகூரின் மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கேட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
'பக்கட்டான் ஹரப்பான் அல்லது புதிய கூட்டணி': நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கோரும் ஜொகூர் மன்னர்

(படம்: Facebook / Sultan Ibrahim Sultan Iskandar)

ஜொகூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கட்டான் ஹரப்பானையோ, புதிய கூட்டணியையோ தெரிவு செய்ய விரும்புகிறார்களா என்பதை ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் ஜொகூரின் மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கேட்டுள்ளார்.

மன்னரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாய்க் கூறினர்.

ஒவ்வொருவரிடமும் மன்னர் சுமார் ஐந்து நிமிடம் பேசியதாகச் சொன்ன அமானா கட்சியின் ஸுல்ஃபிக்லி அஹ்மது, அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதில் மன்னரின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அல்லது புதிய கூட்டணி, இவற்றில் எது உங்கள் விருப்பம் என்று மன்னர் தம்மிடம் கேட்டதாகக் கூறினார் பெகோக் தொகுதி உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன்.

மலேசியப் பிரதமர் பொறுப்பிலிருந்து டாக்டர் மகாதீர் முகமது திங்கட்கிழமை திடீரென விலகினார். அதைத் தொடர்ந்து, பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியிலிருந்தும் அவருடைய பெர்சாட்டு கட்சி விலகியது. திரு.அன்வார் இப்ராஹிமின் கெஅடிலான் கட்சி உறுப்பினர்கள் சுமார் 10 பேரும் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து விலகினர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்