Images
  • joko (1)
    (படம்: Reuters)

இந்தோனேசிய அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் அது அவருடைய இரண்டாம் தவணையாக அமையும்.

திரு. விடோடோவை எதிர்த்து கெரிண்டிரா கட்சித் தலைவர் திரு. பிரபோவோ சுபியாந்தமீண்டும் போட்டியிடவிருக்கிறார்.

அதிபர் விடோடோ, துணை அதிபர் பதவிக்கு இந்தோனேசிய உலமா மன்றத் தலைவர் திரு. மருஃப் அமினைப் பதிவு செய்துள்ளார்.

இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவதில் அவர் முக்கியப் பங்காற்றக்கூடும்.

திரு. விடோடோவும் திரு. அமினும் இன்று வேட்பு மனுத் தாக்கல் நிலையத்துக்குச் சேர்ந்தே சென்றனர்.

அவர்களை வரவேற்க அங்கு ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

எதிர்த்தரப்பு வேட்பாளர் திரு. பிரபோவோ ஜக்கர்த்தாவின் துணை ஆளுநர் சண்டியாகா உனோவைத் துணை அதிபர் பதவிக்குத் தெரிவுசெய்துள்ளார்.

நாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு தாம் அவரைத் தேர்ந்தெடுத்ததாகத் திரு. பிரபோவோ கூறினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் திரு. விடோடோவுடன் போட்டியிட்டுத் தோற்றார்.

திரு. விடோடோ 53 விழுக்காட்டும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபரானார்.

இந்தோனேசிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்படக்கூடும்.

Top