Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தை வழிநடத்தியவர் விடுதலை

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தை வழிநடத்தியதற்காகச் சிறைத் தண்டனை நிறைவேற்றிய 22 வயது ஜோஷுவா வோங் (Joshua Wong) இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தை வழிநடத்தியதற்காகச் சிறைத் தண்டனை நிறைவேற்றிய 22 வயது ஜோஷுவா வோங் (Joshua Wong) இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு Umbrella Movement எனும் குடைகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அவர் வழிநடத்தினார்.

அப்போது திரு வோங்கிற்கு 17 வயது.

ஆர்ப்பாட்டங்களைக் கலைக்கவிடாமல் தடுத்ததை ஒப்புக்கொண்ட அவருக்கு அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

6 நாட்கள் மட்டுமே அவர் சிறையில் கழித்தார்.

விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த காலத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சிறைத்தண்டனை 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் திரு. வோங் பேசினார்.

சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றின் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து அவர் கருத்துரைத்தார்.

அந்த விவகாரத்தின் தொடர்பில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கெரி லாம் பதவி விலகவேண்டும் என்று திரு வோங் கேட்டுக்கொண்டார்.

ஹாங்காங்கின் தலைவராக நீடிக்க, திருமதி லாம் தகுதியற்றவர் என்றும் அவர் சொன்னார்.

குறைகூறல்களை ஏற்றுக்கொண்டு பொறுப்பில் இருந்து அவர் விலகவேண்டும் என்றும் திரு. வோங் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்