Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான் நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகம் இப்போது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் தண்ணீர், எரிவாயு விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த சிறிது காலமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஜப்பான் நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

(படம்:AFP/JIJI PRESS)

ஜப்பானை நேற்றுஉலுக்கிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்கிற்கு உயர்ந்துள்ளது.

மேலும், 380க்கு மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மாண்டவர்களில் 9 வயதுச் சிறுமியும் ஒருவர். 

காயமுற்றவர்கள் எவ்விதக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனும் விவரம் தெரியவில்லை. 

மீட்புப் பணி இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், அரசாங்கம் அதில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

நிலநடுக்கத்தால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகம் இப்போது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும் தண்ணீர், எரிவாயு விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த சிறிது காலமாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்