Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கிழக்காசியப் போட்டிகளைப் பாதித்துள்ள கமுரி சூறாவளி

பசிபிக்கின் மேற்குப் பகுதியில் பிலிப்பீன்ஸை நோக்கிச் செல்லும் கமுரி சூறாவளி வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகளைப் பாதித்துள்ள கமுரி சூறாவளி

(படம்: AFP/Ted ALJIBE)

பசிபிக்கின் மேற்குப் பகுதியில் பிலிப்பீன்ஸை நோக்கிச் செல்லும் கமுரி சூறாவளி வலுப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அல்லது 4ஆம் நிலைச் சூறாவளியாக அது உருவெடுக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கமுரி சூறாவளியால், மணிக்கு 170 கிலோமீட்டர் வேகங்கொண்ட காற்று வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

பள்ளிகளும் அரசாங்க அலுவலகங்களும் நாளையும், நாளை மறுநாளும் மூடப்பட்டிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தென் கிழக்காசிய விளையாட்டுகளும் அந்தச் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

அலையாடல், பெண்களுக்கான மூவகைப் போட்டிகள் உள்ளிட்டவை மோசமான வானிலையை முன்னிட்டு முன்கூட்டியே நடத்தப்படவிருக்கின்றன.

உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஏற்பாட்டுக் குழு மறுவுறுதிப்படுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்