Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கமுரி சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகும் பிலிப்பீன்ஸ்

பிலிப்பீன்ஸ் கமுரி சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் கமுரி சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்.

இன்று மாலையிலோ, நாளைக் காலையிலோ சூறாவளி தாக்கலாம்.

மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி, மூவாயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். என்றாலும், வீடுகளை விட்டு கட்டாயம் வெளியேறுவதற்கான எந்த ஆணையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

சில நகரங்களில் பள்ளிக் கூடங்களுக்கும், அரசாங்க அலுவலகங்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை பெய்யும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. தென் கிழக்காசிய விளையாட்டுகளும் சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளன.

சுபிக் நகரில் நடத்தப்படவிருந்த அலையாடல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பெண்கள் மூவகைப் போட்டியும் இருவகைப் போட்டியும் முன்கூட்டியே நடத்தப்படவிருக்கின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்