Images
  • kangaroo

கங்காருவை வதைத்துக் கொன்ற ஆடவருக்குச் சிறை

மெல்பெர்ன்: கங்காருவை வதைத்துக் கொன்றதை காணொளியாகப் பதிவுசெய்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்த 28 வயது ஆஸ்திரேலிய ஆடவருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களைக் கொண்டு இரண்டு கங்காருக்களை வதைத்துக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு ஆடவர்களில் ஒருவர் ரிக்கி இயன் சுவான்.

அவருடைய செயல்கள் மிகக் கொடூரமானவை என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.

தம்முடைய செயலுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்தார் சுவான். தாம் அந்த விலங்கை வதைத்தற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார் அவர்.

சுவானுடன் கங்காருகளை வதைத்த 26 வயது ஆடவருக்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 45 மில்லியன் கங்காருகள் இருப்பதாக நம்பப்படுகிறது. 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில் மனிதர்களைவிட கங்காருகள் ஒரு மடங்கு அதிகமாக உள்ளன.  

Top