Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பதவி விலகும் ஜப்பானியக் கராத்தே அதிகாரி - 'வீராங்கனையின் முகத்தை மூங்கில் கத்தியால் குத்தினார்'

ஜப்பானியக் கராத்தே அதிகாரி ஒருவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் வீராங்கனையைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகவிருப்பதாக அறிவித்திருக்கிறார். 

வாசிப்புநேரம் -
பதவி விலகும் ஜப்பானியக் கராத்தே அதிகாரி - 'வீராங்கனையின் முகத்தை மூங்கில் கத்தியால் குத்தினார்'

கோப்புப் படம்: Pixabay

ஜப்பானியக் கராத்தே அதிகாரி ஒருவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் வீராங்கனையைத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஜப்பானியக் கராத்தே சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநரான மாசாவ் ககாவா முன்னாள் உலக வெற்றியாளர் அயூமி யூக்குசாவைப் பயிற்சியின் போது காயப்படுத்தியதால் பதவி விலகவுள்ளதாகக் கூறினார்.

தமது முகத்தைக் ககாவா மூங்கில் கத்தியால் குத்தியதாக யூக்குசா குற்றஞ்சாட்டினார். மேலும் தமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர் அடிக்கடி குறைகூறியதாகவும் தம்மை நோக்கி அடிக்கடி கத்தியதாகவும் யூக்குசா சொன்னார்.

ஆனால் பயிற்சியின் ஒரு பகுதியாகவே மூங்கில் கத்தியைப் பயன்படுத்தியதாக ககாவா கூறினார்.

அதன் தொடர்பில், தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் யூக்குசா, ககாவா மீது துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.

ககாவாவின் பயிற்சி முறைகள் மிக ஆபத்தானவை என்றும் அவற்றின் காரணமாகத் தமது கண்ணில் காயம் ஏற்பட்டதென்றும் யூக்குசா குறிப்பிட்டார்.

பிரச்சினையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர தமது எல்லாப் பதவிகளிலிருந்தும் தாம் விலகுவதாக ககாவா தெரிவித்தார்.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்