Images
  • kashmir (3)
    (படம்: AFP)

காஷ்மீர் : முடக்கப்பட்டிருக்கும் கைத்தொலைபேசிச் சேவை மீண்டும் செயல்படத் தொடங்கும்

இந்திய அரசாங்கம், காஷ்மீர் பகுதியில் துண்டிக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசித் தொடர்பு மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகக் காஷ்மீரில் 2 மாதங்களுக்கு மேலாகக் கைத்தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நண்பகலுக்குப் பிறகு மாதாந்தரக் கட்டண முறை வாடிக்கையாளர்கள் கைத்தொலைபேசித் தொடர்புகளைப் பயன்படுத்த முடியும் என்று அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

ஆனால் இணையச் சேவைகள் பற்றி அவர் தகவல் தரவில்லை.

சுற்றுப் பயணிகள், காஷ்மீருக்குச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நேற்று முன்தினம் இந்திய அரசாங்கம் நீக்கியது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தடுத்து வைக்கப்பட்ட 3 அரசியல் தலைவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் மறு ஆய்வுக்குப் பிறகு படிப்படியாக விடுவிக்கப்படுவர் என்று கூறப்பட்டது. 

Top