Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காஷ்மீரில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர் - இந்திய இராணுவம்

காஷ்மீரில் துணை இராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கியமான நபர்களைக் கொன்றுவிட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
காஷ்மீரில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர் - இந்திய இராணுவம்

(படம்: Reuters/Danish Ismail)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

காஷ்மீரில் துணை இராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட முக்கியமான நபர்களைக் கொன்றுவிட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, சுமார் 17 மணி நேரம் நீடித்தது.
அதில் Jaish-e-Mohammed தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த மூவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

சென்ற வாரம் துணை இராணுவப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட அந்தக் குழு பொறுப்பேற்றது.

அதில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் தொடர்பு உண்டு என்று இந்திய இராணுவம் குற்றஞ்சாட்டி வருகிறது.

தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள பாகிஸ்தான், அதில் தனக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தது.

இந்தியா சுமத்தும் குற்றச்சாட்டை நிரூபிக்க வெளிப்படையான, நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என்று இஸ்லாமாபாத் வலியுறுத்தியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்