Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிளந்தான் சுல்தான் ரஷ்ய அழகி மணமுறிவு - வழக்குரைஞர்கள் உறுதி

மலேசியா: கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது (Muhammad V), இஸ்லாமிய சட்டத்தின்படி தம்முடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த அவருடைய வழக்குரைஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
கிளந்தான் சுல்தான் ரஷ்ய அழகி மணமுறிவு - வழக்குரைஞர்கள் உறுதி

(படம்: Instagram)


மலேசியா: கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது (Muhammad V), இஸ்லாமிய சட்டத்தின்படி தம்முடைய மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த அவருடைய வழக்குரைஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

முன்னாள் ரஷ்ய அழகியான ரிஹானா ஒக்ஸானா கொர்பதென்கோவை (Rihana Oxana Gorbatenko) சுல்தான் ஐந்தாம் முகமது கடந்த மாதம் 22ஆம் தேதி விவாகரத்து செய்தார்.

இருவரும் இஸ்லாமிய வழக்கம்படி திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் Daily Mail தெரிவித்தது.

அதன்பின் 2018 நவம்பர் மாதம் ரஷ்யாவில் அவர்களுடைய திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து சுல்தான் ஐந்தாம் முகமது, மாமன்னர் பதவியிலிருந்து விலகினார்.

ஐந்தாண்டு பதவி வகிக்கும் கால அவகாசம் உள்ள நிலையில் இதுவரை ஏற்படாத ஒன்றாக இரண்டே ஆண்டுகளில் பதவியை விட்டுக்கொடுத்தார் சுல்தான்.

இருவருக்கும் இடையிலான விவாகரத்து குறித்து இதற்கு முன்னரே வதந்திகள் வரத்தொடங்கின.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்