Images
  • kerala
    (படம்: AFP)

கேரள மாநில வெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 35 ஆனது

இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தில், குறைந்தது 35 பேர் மாண்டனர்.

சுமார் 36 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொடர் பருவ மழையால், நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன; நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில், ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் கேரள மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் செல்வதாய்ப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.  

Top