Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கேரளா வெள்ளம் - கொச்சி விமான நிலையத்தில் சேவைகள் ரத்து

இந்தியாவின் கேரள மாநில மக்கள், கடந்த ஒரு வாரமாகவே இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
கேரளா வெள்ளம் - கொச்சி விமான நிலையத்தில் சேவைகள் ரத்து

(படம்: AFP)

இந்தியாவின் கேரள மாநில மக்கள், கடந்த ஒரு வாரமாகவே இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நூறாண்டு காணாத அடைமழை, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் ஆகியவற்றால் அந்த மாநிலம் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

உயர்ந்து வரும் வெள்ளநீரால் கொச்சி விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும்.

வெள்ள நீரை அப்புறப்படுத்த அங்குள்ள அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தின் காரணமாக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று தொடங்கும் ஓணம் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீடிக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்