Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அம்னோவின் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட கைரி ஜமாலுதீன் திட்டம்

மலேசியாவின் எதிர்க்கட்சியான அம்னோவின் உயர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
அம்னோவின் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட கைரி ஜமாலுதீன் திட்டம்

(படம்: AFP/Saeed Khan)

மலேசியாவின் எதிர்க்கட்சியான அம்னோவின் உயர் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

கட்சித் தேர்தல் இந்த மாதம் 30ஆம் தேதி நடைபெறும்.

தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடப்போவதாக அம்னோவின் இளையர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னைய இளையர், விளையாட்டுதுறை அமைச்சரான அவர் Instagram பதிவில் அதைத் தெரிவித்தார்.

மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சிமீது தவறான நம்பிக்கை ஏற்பட்டிருந்ததாகத் திரு. கைரி சேனல்நியூஸ் ஏஷியாவிற்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

அனுபவமிக்க பழைய அம்னோ கட்சித் தலைவர்களில் ஒருவரான ரஸாலி ஹம்ஸாவும் தாம் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அம்னோ எதிர்க்கட்சியாக இருந்து அதன் பங்கையாற்றுவது, நாட்டிற்கு விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்வது ஆகியவற்றைத் தாம் உறுதிசெய்யவிருப்பதாய் அவர் குறிப்பிட்டார்.

81 வயதாகும் அவர் இதற்குமுன் இருமுறை தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டிருந்தார்.

1987இல் டாக்டர் மகாதீர் முகமதுக்கு எதிராகவும் 2004இல் திரு. அப்துல்லா அகமது படாவியை எதிர்த்தும் போட்டியிட்டு அவரால் வெற்றிபெற முடியவில்லை.

திரு. கைரியும் திரு. ரஸாலியும் அம்னோவின் தற்போதைய தற்காலிகத் தலைவராகச் செயலாற்றும் திரு. ஸாஹித் ஹமிடிக்கு எதிராகப் போட்டியிடவுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தில் திரு. ஸாஹித் துணைப் பிரதமராகச் சேவையாற்றினார்.

சவாலை வரவேற்றிருக்கும் அவர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

1987இல் கருத்துவேறுபாடுகள் காரணமாகக் கட்சி பிளவுபட்டதுபோல் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்