Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவின் அதிகாரபூர்வத் தலைவராக கிம் ஜோங் உன் அறிவிப்பு

வடகொரியாவின் அதிகாரபூர்வத் தலைவராகத் திரு. கிம் ஜோங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

வடகொரியாவின் அதிகாரபூர்வத் தலைவராகத் திரு. கிம் ஜோங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்பில் பியோங்யாங், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திருப்பதாய் Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றிய விவரங்கள் வடகொரியாவின் பரப்புரைக்கான இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த உயர்நிலைப் பொதுக்கூட்டத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்கீழ், திரு. கிம் வடகொரியாவின் தலைவர் என்ற பொறுப்பை மட்டுமின்றி, வெளியுறவு விவகார ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் வகிப்பார்.

இதற்கு முன்னர் இரு வேறு நபர்கள் அந்தப் பொறுப்புகளை வகிப்பது வடகொரியாவில் வழக்கம்.

திரு. கிம் ஏற்றிருக்கும் புதிய பொறுப்பு, உலக நாடுகளுடன் வடகொரியாவின் அரசதந்திர உறவுகளை வழக்கநிலைக்குக் கொண்டுவர அவருக்கு உதவும் என்று Bloomberg செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், வர்த்தக மேம்பாடு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற சாதகங்களை அடைவதில் வடகொரியா கவனம் செலுத்தும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்