Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கு - தீர்ப்பளிக்கவிருக்கும் மலேசிய நீதிமன்றம்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி அயிஷா, வியட்நாமியரான டோஆன் தி ஹியோங் இருவரும் விடுவிக்கப்படலாம் அல்லது அவர்கள் தரப்பு வாதத்துக்கு வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

வாசிப்புநேரம் -
வடகொரியர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கு - தீர்ப்பளிக்கவிருக்கும் மலேசிய நீதிமன்றம்

(படம்:AFP/Toshifumi Kitamura)

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கில், மலேசிய நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி அயிஷா, வியட்நாமியரான டோஆன் தி ஹியோங் இருவரும் விடுவிக்கப்படலாம் அல்லது அவர்கள் தரப்பு வாதத்துக்கு வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

இரு பெண்களும் திரு. கிம் ஜோங் நாமின் முகத்தில் நச்சு இரசாயனத்தைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

மலேசியச் சட்டத்தின் கீழ், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும்.

இரு பெண்களையும் விடுவிப்பதா அல்லது அவர்கள் மீதான விசாரணையைத் தொடர்வதா என்பதை உயர் நீதிமன்றம் இன்று முடிவெடுக்கும்.

20இலிருந்து 30 வயதுக்குட்பட்ட இரு பெண்களும், தொலைக்காட்சிக் குறும்பு நிகழ்ச்சியில் தாங்கள் பங்கெடுப்பதாக நினைத்திருந்ததாய்க் கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள், வடகொரிய அதிகாரிகளால் கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்ட கொலைகாரர்கள் என்று அரசாங்கத் தரப்பு வாதிடுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்