Images
  • kim
    (படம்:KCNA/via REUTERS../File Photo)

வடகொரியா: பொருளியல் குறித்துத் திரு கிம் ஜோங் உன் மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) தொழிலாளர் கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆண்டின் இரண்டாம் பாதிப் பொருளியலை மதிப்பீடு செய்து மேம்படுத்துவது குறித்து ஆராய அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக KCNA செய்தி நிறுவனம் கூறியது.

வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்தை நிறுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அனைத்துலகத் தடைகளால் அதன் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் எதனையும் வடகொரியா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஆளுங்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இந்த மாதப் பிற்பகுதியில் நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக மூத்த அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றதாக
KCNA தெரிவித்தது.

பொருளியலையும் மக்களின் வாழ்க்கையையும் நிலைப்படுத்துவதில் உறுதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்குத் திரு கிம் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.


-Reuters/ta

Top