Images
  • kim jong un
    (படம்: AFP)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் - வட கொரியத் தவைர் கிம் ஜோங் உன் அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un), மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளியல் நிலவரம் மோசமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வட கொரியத் தொழிலாளர் கட்சியின் 76ஆம் ஆண்டு நிறைவு விழாவில் திரு கிம் உரையாற்றினார்.

அணுவாயுதத் திட்டங்களுக்காக விதிக்கப்பட்ட தடைகளால், வட கொரியப் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கனத்த மழையும் வெள்ளமும் நிலவரத்தை மோசமாக்கியுள்ளன.

நோய்ப்பரவல் காலத்தில் வட கொரியா தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டதால், அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  

Top