Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியா: ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைச் செயலாளராக கிம் ஜோங் உன் தெரிவு

வடகொரியா: ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைச் செயலாளராக கிம் ஜோங் உன் தெரிவு

வாசிப்புநேரம் -

வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைச் செயலாளராக அந்நாட்டுத் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் அதிகாரத்துவச் செய்தி நிறுவனமான KCNA அது குறித்து தகவல் அளித்தது.

திரு. கிம் தமது காலஞ்சென்ற தந்தை வகித்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.

வடகொரிய தலைவர் கிம் தமது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கையாக அது கருதப்படுகிறது.

நாட்டின் அடுத்த ஐந்தாண்டு காலத் திட்டங்களை வகுக்க கட்சி ஏற்பாடு செய்த மாநாட்டில் தலைமைச் செயலாளர் பொறுப்புக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்தப் பொறுப்புக்குத் திரு. கிம்மைத் தெரிவுசெய்ய நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்