Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியக் குடிமகன் கொலையுண்ட சம்பவம் - வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மன்னிப்பு

தென்கொரியக் குடிமகன் கொலையுண்ட சம்பவம் - வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மன்னிப்பு

வாசிப்புநேரம் -
தென்கொரியக் குடிமகன் கொலையுண்ட சம்பவம் - வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மன்னிப்பு

(படம்: REUTERS/Kim Kyung-Hoon)

தென் கொரிய அதிகாரி ஒருவர் தங்கள் கடற்பகுதியில் கொல்லப்பட்டது குறித்து வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு எழுதிய கடிதத்தில், அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்று வருணித்த திரு. கிம், தென் கொரிய மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர், தென் கொரிய மீன்வளத் துறை அதிகாரி. எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் Yeongpeong தீவுக்கு அருகே அவர் காணாமற்போனார்.

வடகொரியத் துருப்பினர் அவரைச் சுட்டுக் கொன்றதுடன், அவரது உடலுக்கு எரியூட்டியதாகவும் சோல் கூறுகிறது.

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்கீழ், அந்த ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வடகொரியா சொன்னது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்