Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வட கொரியத் தலைவர் கிம், ரயிலில் வியட்நாம் செல்கிறார் - ராய்ட்டர்ஸுக்குக் கிடைத்த தகவல்

வியட்நாம் தற்போது, டிரம்ப் - கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்புக்காகத் தயாராகி வருகிறது.

வாசிப்புநேரம் -
வட கொரியத் தலைவர் கிம், ரயிலில் வியட்நாம் செல்கிறார் - ராய்ட்டர்ஸுக்குக் கிடைத்த தகவல்

(படம்: Reuters/KCNA)

வியட்நாம் தற்போது, டிரம்ப் - கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்புக்காகத் தயாராகி வருகிறது.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ரயில் மூலம் வியட்நாமுக்குச் செல்வார் என்றும் அதன் பிறகு தலைநகர் ஹனோய்க்கு அவர் கார் மூலம் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

தலைவர்களின் சந்திப்புக்கான பாதுகாப்பு, திட்டமிடல் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள தரப்புகளை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

ரயில் மூலம் பியோங்யாங்கில் இருந்து வியட்நாம் செல்ல கிட்டத்தட்ட 60 மணி நேரமாகலாம்.

இம்மாதம் 25ஆம் தேதி திரு. கிம் ஹனோய் சென்றுசேரத் திட்டமிடப்பட்டுள்ளது.

உச்சநிலைச் சந்திப்பு 27, 28 ஆம் தேதிகளில் மத்திய ஹனோயில் உள்ள அரசாங்க விருந்தினர் மாளிகையில் நடைபெறக் கூடுமென ஊகிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த ஏற்பாடுகள் அனைத்துமே மாறுதலுக்கு உட்பட்டவை என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்